judiciary

செந்தில் பாலாஜி வழக்கு: `900 பேரைச் சேர்த்திருக்கிறோம்!’ – சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-2015 ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர்மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்தனர். சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு…

Read More
judiciary

`பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது எப்படி?’ – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அதேபோல சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார்…

Read More
judiciary

“தூரத்தைக் காரணம் காட்டி பள்ளிச் சேர்க்கையை மறுப்பதா?” – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக் கோரி கடந்த 2022 மே மாதம் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பள்ளி நிர்வாகம், லட்சுமணனின் வீடு பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் இருப்பதாக கூறி, அவரின் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து கல்விக் கட்டணத்தை செலுத்தி தன் மகனை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.