சேவ் பூரி, ஆலு சாட், தவா புலாவ்…. வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் வெரைட்டி சாட் வகைகள்!
என்னதான் வார இறுதியில் விருந்தே சாப்பிட்டாலும் மாலைநேரத்தில் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளுக்கான தேடல் எப்போதும் இருக்கும். சாட் கடைகளில் விற்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் போன்றவை மட்டுமன்றி விலையும் நம்மை யோசிக்க வைக்கும் நிலையில், விதம் விதமான சாட் அயிட்டங்களை வீட்டிலேயே செய்து ருசிக்கத்தான் இந்த ரெசிப்பீஸ்… சேவ் பூரி தேவையானவை: பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்) உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து…