Leo Vs பகவந்த் கேசரி முதல் ‘சலார்’ Vs ‘டங்கி’ வரை… 2023 இறுதியில் நடக்கும் ஸ்பேரிங்!
ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால், ‘யார் பெருசுனு அடிச்சுக்காட்டு’ என ஒரே களேபரமாக இருக்கும். பெரிய படம் என்றாலே இப்போது ஒரு மொழியில் மட்டும் வெளியாவதில்லை. பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, அதே நாளில் வெளியாகிறது. ஒரு பெரிய படத்தில் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது என்பது பெரிய டாஸ்க். விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் எனப் பார்த்து பார்த்து முடிவெடுப்பார்கள். மற்ற மொழிகளிலும் வெளியிடத் திட்டமிருந்தால், அந்த மொழிகளில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகிறதா என்பதை பார்ப்பார்கள்….