ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும்: சீமான்

புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ மாநிலங்களின் தன்னாட்சி … Read More

இனிமேல் மாதம் ஒருமுறை மின்கட்டணம்? – அமைச்சர் தங்கமணி

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மின் ஊழியர்களால் மின்கட்டண மதிப்பீடு செய்ய … Read More

தேசிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராயக் குழு – தமிழக அரசு

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை எனவும் இருமொழிக்கல்வி மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு … Read More

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவது நல்லதல்ல : உயர்நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிமம் இல்லாமல் துப்பாக்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற வகையில் தொடரப்பட்டிருந்த வழக்கில் இன்று கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர், தமிழகத்தில் … Read More

புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்க பழனிசாமி அரசு அனுமதிக்ககூடாது: தினகரன்

மும்மொழிக்கொள்கையை எதிர்த்தது போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது. பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவராமல் தாய்மொழியை உயர்த்திபிடிக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை … Read More

மதுரை: பழமையான மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

மதுரையில் பழமையான மகாவீரர் சிலை மற்றும் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் கல்வெட்டுகள் … Read More

போயஸ் கார்டனில் சசிகலா கட்டும் புதிய வீடு? வேதா நிலையத்தை விட பெரியதா?

சென்னை போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் போன்றே, அதன் அருகில் பெரிய வீடு ஒன்றை சசிகலா கட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு போயஸ் கார்டன் … Read More

சென்னையில் இனி ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்

சென்னையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட, அரசு வழங்கிய அனுமதியை ஒட்டல்கள் செயல்படுத்த தொடங்கியது.  காலை 6 முதல் இரவு 7 மணி வரை சாப்பிடவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் … Read More

முயல்வேட்டைக்குச் சென்ற சிறுவன் தலையில் ஈட்டிபாய்ந்ததில் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் முயல் வேட்டைக்குச் சென்ற சிறுவனின் தலையில், ஈட்டி பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அம்பலச்சேரி மேலத்தெருவைச் சேர்ந்த தங்கத்துரையின் மகன் இசக்கிமுத்து. இவர் தனது சகோதரர் சுடலை மற்றும் 6 நண்பர்களுடன் முயல் வேட்டைக்குச் சென்றார். … Read More

பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்

சூரியனைச் சுற்றி ஏற்பட்ட ஒளி வட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதி பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். ஆவடியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டியது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென … Read More