கள்ளக்குறிச்சி: தனியார் உணவகத்தில் அங்கன்வாடி சத்துணவு முட்டைகள்; அதிர்ந்துபோன அதிகாரிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அதன்படி சின்னசேலம் – சேலம் மெயின் ரோட்டில் இருந்த உணவகம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சுமார் 100 சத்துணவு முட்டைகள், முத்திரையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்….