`என் உடலின் ஒவ்வோர் அங்குலத்தையும் நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்’ இலியானாவின் பாடி பாசிட்டிவிட்டி
தெலுங்கு மற்றும் ஹிந்தி பட நடிகையான இலியானா, `நண்பன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர். தனக்கென திரைத்துறையில் ரசிகர் பட்டாளத்தைப் பிடித்த இலியானா, சமீப காலங்களில் வெளி உலகிற்கு பெரிதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இந்நிலையில், சமீபத்தில் சமூக ஊடகத்தில், `பாடி பாசிட்டிவிட்டி’ (Body Positivity) குறித்து பகிர்ந்து கொண்ட இலியானா, “உங்கள் உடலை மிகவும் சிரமமின்றி மெலிதாகக் காண்பிக்கும் ஆப்களை பயன்படுத்துவது எளிது. அந்த அப்ளிகேஷன்களை நான் நீக்கியதில் பெருமை அடைகிறேன். என் உடலின் ஒவ்வோர் அங்குலத்தையும்…