ராமநாதசுவாமி கோயில்: `விதிமீறல் செய்யும் இணை ஆணையரை மாற்றுக’- இந்து அமைப்பினர் முற்றுகைப் போராட்டம்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையராகப் பதவி வகித்து வருபவர் மாரியப்பன். இவர் ஆகம விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும், பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை சீர்குலைத்து, கோயிலை வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றிவிட்டதாவும், மக்கள் பேரவை அமைப்பினர், இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க-வினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருக்கும் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இது தொடர்பாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்கள், “உலகப் பிரசித்திப்…