நெருக்கும் அமலாக்கத்துறை… அமைச்சர் பொன்முடிக்கு சிக்கலா?!
கடந்த நவம்பர் 30-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. எதனடிப்படையில் அமைச்சருக்கு சம்மன் வழங்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்தோம். செம்மண் வெட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மீது 2012-ல் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 2021-ல் உயர் நீதிமன்றத்தை நாடினார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நீதிமன்றங்கள் அமைச்சரின் மனுக்களை தள்ளுபடி…