40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்… தடுமாறும் இங்கிலாந்து
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 5 முறை வட்டி விகிதத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து உயர்ந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாத பணவீக்கம் 9.1 சதவீதமாக இருக்கிறது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்ந்துவருவதால் நடப்பு ஆண்டு முடிவுக்குள் பணவீக்கம் 11 சதவீதம் அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் பணவீக்கம் மே மாதத்தில்…