Banner

இஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார் நிலையில் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, 11.04.2020 இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது…

Read More
Banner

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறிய வழிப்பாட்டு தலங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் வழிப்பாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Banner

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்

 அரக்கோணம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.வேலு உடல்நலக் குறைவால் காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எம்.வேலு முதலியார் உடல்நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கடந்த 1980ல் காங்கிரஸ் சார்பிலும் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியை பூர்வீகமாக கொண்ட இவர் 1947 ஆம் ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.