Human Stories

மாஞ்சோலை: கால் நூற்றாண்டு கடந்தும் தொடர்கிறது ஆறாத வடுக்களின் ரணம்!

போராட்டக்காரர்களின் ஆதங்கத்தை நிர்வாகத்தின் அதிகார மையத்துக்கு எதிராக முழுமையாக வெளிப்படுத்த இயலவில்லை. அந்த விரக்தியானது அவர்களின் சக தொழிலாளர்களுக்கு எதிரான வன்மமாய் வெளிப்படத் துவங்கியது. எஸ்டேட்டில் பக்கத்து வீடுகளில் இருந்து அரிசி, சோறு, குழம்பு, காய்கறி, சீனி, மண்ணெண்ணெய், கத்தி, கோடாலி, விறகு, டார்ச், சிரட்டையில் தீ கங்கு என அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் இலவசமாகவோ, அவ்வப்போது கடனாகவோ, பண்ட மாற்றாகவோ பெற்றுக்கொள்வது சாதாரண நிகழ்வு. விடுமுறை நாட்களில் அந்த லயத்தில் உள்ள சிறுவர்கள் எல்லோரும்…

Read More
Human Stories

மாஞ்சோலை: கம்பெனியை இழுத்து மூடயிருக்கிறோம் என்ற அச்சுறுத்தலும், நிச்சயமில்லா வாழ்வும்….

தேயிலையை, செடி என்றே பலரும் கருதுகிறோம். எதார்த்தத்தில் தேயிலை ஒரு மரம். 2000 – நூற்றாண்டு தொடங்கியிருந்த வருடம். வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்பியிருந்த சமயம். போராட்டக்காரர்களும், கம்பெனி ஆட்களும் தனித்தனி காடுகளில் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக இடையில் சுமார் இரண்டாண்டு காலம் கவாத்து செய்யாததால், உடனடியாக கவாத்து செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் செடிகள், தேயிலை மரங்களாக வளர்ந்து, உருமாறி நின்றன. அதுநாள் வரையிலும் தேயிலையைச் செடியாக மட்டுமே…

Read More
Human Stories

மாஞ்சோலை கதைகள்: 52 நாட்கள் சிறைவாசம்; அனுபவித்த சித்ரவதைகள்; முடிவுக்கு வந்த போராடும் முறை!

52 நாட்கள் சிறைவாசத்திற்கும், ஜூலை 23 பேரணியில் அனுபவித்த சித்ரவதைகளுக்கும் பின்னர் எஸ்டேட்டுக்கு வெளியே சென்று அவ்வப்போது போராடும் முறை முடிவுக்கு வந்தது. ஆனால் கம்பெனிக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் முன்பு போல எஸ்டேட்டுக்குள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. காவல்துறை தடியடியில் பலியான 17 பேரில், போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாஞ்சோலை மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலிருந்து எவரும் இல்லை என்பதாலும், அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த சம்பவத்தின் முழுமையான விவரணை ஊடகங்கள் வாயிலாகவோ, தலைவர்கள் வாயிலாகவோ அவர்களுக்குக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.