புதுச்சேரி: டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் மக்கள்!
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குருமாம்பேட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூலம் என்பவரின் மகள் காயத்ரி. 19 வயதான இவர், கிருமாம்பக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், மூலக்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை…