Health Nature

தென்காசி: சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்

தென்காசி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி – ஆய்க்குடி செல்லும் சாலை ஓரங்களில் பல இடங்களில் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. இதில், சில மூட்டைகள் எரிக்கப்பட்டும் சில மூட்டைகள் எரிக்கப்படாமலும் சுகாதாரக்கேடு உருவாகும் வகையில் உள்ளன. ஆய்க்குடி செல்லும் சாலையில் அடிக்கடி பாதசாரிகள் நடந்து செல்லும் சாலை ஓரத்தில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், ஊசிகள், ஐவி செட்கள், காலாவதியான மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள்…

Read More
Health Nature

சத்தியமங்கலம்: சாலையில் நடமாடும் கரடிகள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

தலமலை சாலையில் கரடி நடமாட்டம். வாகனங்களை கண்டு அஞ்சியபடி குடுகுடுவென ஓடிய கரடி இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், வன விலங்குகள் அவ்வப்போது பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்வதற்காக ஒரு காரில் மூன்று பேர் தலமலை வனச்சாலையில்…

Read More
Health Nature

கூடலூர்: தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பு

கூடலூர் அருகே அரசு தேயிலைத் தோட்டத்தில், தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர். அதை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடோன் பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்று வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.