தங்க வேட்டை, புரட்சி, போலீஸ் அராஜகம்… எப்படி இருக்கிறது #MoneyHeist4?
க்வாரன்டீன் சூழலில் திரும்பிய பக்கமெல்லாம் இணையத்தில் வெப் சீரிஸ்களாகத்தான் இருக்கின்றன. 1 மணி நேரத்தில் ஆரம்பித்து 8, 10, 20 மணி நேரம் என சில வெப் சீரிஸ்கள் சரக்கு ரயிலின் பெட்டிகள் போல் நீண்டுகொண்டே இருக்கின்றன. குவிந்துகிடக்கும் சாம்பல் மேடுகளுக்கும் புகை மண்டலங்களுக்கும் நடுவே அவ்வப்போது அத்தி பூத்தாற்போல, நல்ல சீரிஸ்களும் வெளியாகின்றன. அதில் ஒன்றுதான் ‘மணி ஹெய்ஸ்ட்’. எப்போதுமே ஹெய்ஸ்ட் கதைகள் பார்ப்பது அலாதியானது. திருடன் போலீஸ் விளையாட்டில், சுவாரஸ்யமாகத் திருடும் திருடர்கள்தான் மக்களின்…