சிட்சிபாஸை ஆசைகாட்டி மோசம் செய்த ஜோகோவிச்… ஃபெடரர், நடால் தடுமாற ‘ஜோகோ’ மட்டும் சாதிப்பது எப்படி?
கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை தொடர்ந்து முத்தமுடும் ஜோகோவிச் நேற்று நள்ளிரவில் பிரெஞ்சு ஓப்பன் கோப்பையையும் முத்தமிட்டார். இதுவரை ஆஸ்திரேலிய ஓப்பன் கோப்பையை ஒன்பது முறையும், விம்பிள்டன் கோப்பையை 5 முறையும், அமெரிக்க ஓப்பன் கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கிறார் நோவாக் ஜோகோவிச். செர்பிய நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான இவருக்கு பிரெஞ்சு ஓப்பனை இரண்டாம் முறை வெல்வது மட்டும் மிகக் கடினமாக இருந்தது. பிரெஞ்சு ஓப்பனை இரண்டாம் முறை வென்றுவிட்டால் நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும் இரண்டு…