Vikatan Exclusive: “இப்பவும் நான் ஒரு கம்யூனிஸ்ட்தான்!” – சத்குரு ஜக்கி வாசுதேவ் நேர்காணல்
ஆனந்த விகடன் யூடியூப் சேனலின் கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் தனது கடந்த கால வாழ்க்கை, ஆன்மிகம் எனப் பலவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள். மைசூரில் ஆரம்பித்த உங்களது ஆரம்பகட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்… “என் கடந்த கால வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமானதுதான். என்னுடைய அப்பா கண் மருத்துவர். அம்மா ஒரு பக்தியான ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த பெண்மணி. மூணு பேரு என் கூட…