FIFA World Cup 2022: மரடோனாவை ஞாபகப்படுத்திய மெஸ்ஸியின் அந்த அசிஸ்ட்!
மெஸ்ஸி எனும் மந்திரவாதி; லூகா மோர்டிச் – போற்றப்படாத வீரன்; இரண்டு நாயகர்களின் கதை!
நேற்று லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவுக்கும், லூகா மாட்ரிச் தலைமையிலான குரோஷியாவுக்குமிடையேயான உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கோலடிக்க அதிக வாய்ப்புள்ள முன்கள வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் ஆகிய பெயர்களை அறிந்த அளவுக்கு இங்கே நடுக்கள வீரரான மாட்ரிச்சின் பெயர் அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் ஒரு ஆட்டம் செல்லும் திசையைத் தீர்மானிப்பவர்கள் நடுக்கள ஆட்டக்காரர்கள்தான் என்பது தெரிந்த கால்பந்து ரசிகர்களுக்கும் லூகா மாட்ரிசின் முக்கியத்துவம் புரியும். Luka Modrich வெறும் நாற்பது லட்சம் மக்கள் தொகை…