School education

ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒரு வாரம் விடுமுறை – தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய நிர்வாகிகள் மாநாடு, நீலகிரி‌ மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்றுவருகிறது. ஊட்டியிலுள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் ஆர்‌.எஸ்.எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்றுவருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆர்.எஸ்.எஸ் மாநாடு இந்தத் தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாகப் பெற்றோர்…

Read More
School education

No Bag Day: மாதத்தில் 4-வது சனிக்கிழமை புத்தகப்பை தேவையில்லை; தெலங்கானா அரசின் புதிய திட்டம்!

குழந்தைகளின் புத்தகப் பைகளைப் பெற்றோர்களே தூக்கச் சிரமப் படுவதுண்டு. நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் என கிலோ கணக்கில் எடையுள்ள பையை பள்ளிக்குப் பிள்ளைகள் தூக்க முடியாமல், குனிந்தபடி எடுத்துச் செல்வதைப் பார்த்தால் மனம் சற்று வெதும்பிவிடும்.  இந்நிலையில், தெலங்கானா அரசு இந்தக் கல்வியாண்டில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு முதல், மாதத்தின் 4-வது சனிக்கிழமை புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த நாளை…

Read More
School education

நீலகிரி: முடிவுக்குவராத சாதிச்சான்று விவகாரம்; மாற்றுச் சான்று கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைச்சரிவு பகுதியில் பல கிராமங்கள் இருக்கின்றன. ஏக்குனி, பன்னிமரா ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களை `மலைவேடன்’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் போராடி வருகின்றனர். பள்ளியை முற்றுகையிட்ட‌ பெற்றோர் கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று தொடங்கிய நிலையில், தங்களுக்கு மலைவேடன் சாதிச்சான்று வழங்கவில்லையென்றால், பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்கக் கோரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.