India

வேலியே பயிரை மேய்வதா? – தூங்கிக்கொண்டிருந்த நபரின் செல்போனை லாவகமாக திருடிய காவலர்!

கான்பூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நபரிடமிருந்து போலீஸ் ஒருவர் செல்போனை லாவகமாக திருடிச்செல்லும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. பொதுவாக திருட்டு நடந்தால் போலீசாரிடம் புகாரளிப்போம். ஆனால் பொதுமக்களிடமிருந்து போலீசே திருடிச்சென்றால் யாரிடம் முறையிடுவது? இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது கான்பூரில் நடந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரம் ஒரு நபர் படுத்து உறங்கிக்கொண்டுள்ளார். அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் சீருடை அணிந்த இரு போலீசார் நடந்துவருகின்றனர்….

Read More
India

முழு அரசு மரியாதையுடன் முலாயம் சிங்கின் இறுதிச்சடங்கு – உ.பி அரசு அறிவிப்பு

மறைந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளநிலையில், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக உயிர்காக்கும் மருந்துகள் உதவியுடன் அரியானா மாநிலம் குருகிராம் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த…

Read More
India

கொலிஜியத்தில் குழப்பமா?! தலைமை நீதிபதியின் பரிந்துரையை மூத்த நீதிபதி நிராகரித்ததாக தகவல்!

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தலைமை நீதிபதி யு.யு.லலித் கடிதம் மூலம் ஒப்புதல் கேட்டதை மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிராகரித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள 4 மூத்த நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த கொலிஜியம் அமைப்பின் கூட்டமானது கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொலிஜியம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.