ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இளைஞர்கள் : நூதன தண்டனை கொடுத்த குமரி போலீஸ்
கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் உலா வந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சாலைகளில் செல்வோரை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். இதில் இளைஞர்களே பெரும்பாலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இன்று அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து, காய்கறி,…