Arts & Culture Entertainment

‘காளி’ போஸ்டருக்கு கிளம்பிய எதிர்ப்பு: பணிந்தது டொரண்டோ அருங்காட்சியகம் – ட்வீட் நீக்கம்

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, கனடாவின் டொரன்டோவில் ‘காளி’ ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆகா கான் (Aga Khan) அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. டொரன்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம், கனடாவின் பல்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான மாணவர்களின் 18 படைப்புகளை இணைத்து, கடந்த 2 ஆம் தேதி ஆகா கான் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. இதில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை, கவிஞரும், ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார். இந்த போஸ்டர் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக எழுந்த புகாரில், அவர் மீது டெல்லி உள்ளிட்ட இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆகா கான் அருங்காட்சியம் விடுத்துள்ள அறிக்கையில், இந்துக்கள் உள்ளிட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளது….

Read More
Arts & Culture Entertainment

மாநிலங்களவை நியமன எம்.பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா – பிரதமர் மோடி வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஆகின்றனர்.  மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இளையராஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து, “படைப்புகளின் மேதை இளையராஜா, தனது இசையால் தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன.  பின் தங்கிய வாழ்க்கை பின்னணியில் இருந்து மேலெழுந்து வந்து பல்வேறு சாதனைகளை அவர் செய்து காட்டியுள்ள…

Read More
Arts & Culture Entertainment

தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் ரிலீசுக்கு ரெடி – ‘தி லெஜண்ட்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

லெஜண்ட் சரவணின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, மறைந்த விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.