பிரதமர் பிறந்த நாள் விழா … பட்டாசு தீப்பொறி பட்டு வெடித்துச் சிதறிய கேஸ் பலூன்கள்..!
சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள பாடியில் பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரம் கேஸ் பலூன்களை பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்குவந்த விவசாய அணியின் துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி, அங்கிருந்த கேஸ் நிரப்பிய பலூன்கள்…