ஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக அக்கறையோடு மக்கள் பணியாற்றும் அஜித் ரசிகர் மன்றத்தினர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை, அஜித் ரசிகர் மன்றத்தினர் குளிக்க வைத்து சுத்தப்படுத்தினர்.

image

விருதுநகர் மாவட்ட அஜித்குமார் மன்றத்தினர், நடிகர் அஜித்தின் பெயரில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று குளிக்க வைத்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.

image

அதேபோல விபத்தில் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கியும், மரம் நடும் பொதுபணிகளையும் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருவில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை குளிக்க வைத்து, முடிதிருத்தம் செய்து அவர்களுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். சமூக சேவையாற்றிய அஜித் நற்பணி மன்றத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM