மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

image

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீஸரானது கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பட வெளியீடு நெருங்கியதையடுத்து மாஸ்டர் படக்குழு சமீபத்திய சில நாட்களாக படத்தின் ப்ரோமா காட்சிகளை வெளியிட்டு வருகிறது.
அண்மையில் வெளியான ப்ரோமாக்களில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி பேசிய வசனங்கள் கவனம் ஈர்த்தன. இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

அந்தப் போஸ்டரில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி சண்டையிட்டு கொள்ளும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் போஸ்டரானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Master ????
1 day to go ?? pic.twitter.com/4Md76FHbuO
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 11, 2021

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.