இதன் மூலம், மெட் ப்ளஸ் அதன் சொந்த பிராண்டின் 600+ மருந்துகளை 4,200-க்கும் மேற்பட்ட மருந்தகங்களுக்கு வழங்குகிறது. ‘ஸ்டோர் ஜெனரிக்’ என்பது மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் ஒரு பிரபலமான நடைமுறையாக செயல்படுகிறது.

மருந்துகளின் தரம் மற்றும் செயல்திறன் ஆகியவை உற்பத்தியின் தரத்தைப் பொறுத்தது என்ற உண்மையின் அடிப்படையில், இந்தியாவின் முன்னணி CDMO-க்களான (ஒப்பந்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள்) Akums India மற்றும் Windlas Biotech போன்றவற்றுடன் இணைந்திருக்கிறது மெட் ப்ளஸ். இந்த முன்முயற்சியானது EU GMP, WHO GMP மற்றும் GMP தரநிலைகளுக்கு இணங்க அக்யூட் மற்றும் க்ரோனிக் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதைக் குறிக்கிறது.

மெட்பிளஸ், முன்னணி CDMO நிறுவனமான Akums Drugs and Pharmaceuticals-லிருந்து அதன் மருந்துகளை உற்பத்தி செய்கிறது. நுகர்வோரின் நல்வாழ்வுக்காக உயர்தர தயாரிப்புகளை வழங்கும் Akums, இதிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக சேனல்களுக்கான செலவுகள் இல்லாததால் மெட்பிளஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதத்துடன் 50-80% வரை தள்ளுபடியை வழங்குகிறது. தெலங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மெட்பிளஸ் நிறுவனம் ‘ஸ்டோர் ஜெனரிக்’ முறையை அறிமுகப்படுத்தியது. 

இதன் மூலம், 26.2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் மருந்து செலவுகள் ரூ.139.7 கோடி வரை குறைந்துள்ளது. 4,200-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் மருந்தகங்கள் மூலம் தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்ணாடகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பத்து மாநிலங்களில் மெட் பிளஸ் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்கு மருந்துகளை வழங்கி வருகிறது.

அனைத்து பிராண்டட் மருந்துகளுக்கும் 20% தள்ளுபடி வழங்கிய முதல் ஆர்கனைஸ்டு மருந்தகம் தான் நம் மெட் ப்ளஸ். ஸ்டோர் ஜெனரிக் முறையில் மருந்துகளை விற்பனை செய்யும் இந்தவொரு முயற்சி, மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதற்கான ஒரு மகத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.