மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசால் 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2018-ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறும் திட்டத்தை, அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இந்த மாத ஆரம்பத்தில் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிகள் எவ்வளவு நிதிப் பெற்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பின.

உச்ச நீதிமன்றம் – தேர்தல் பத்திரம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசமைப்பு நிறுவனங்கள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் விவகாரத்திலும் தொடர்புடையை நிறுவனம் மூலம் பா.ஜ.க நிதி பத்திரங்கள் மூலம் ரூ.34.5 கோடி பெற்ற விவரங்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது,“அருண் ஜெட்லி மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவாதத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன். நிதி இல்லாமல் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாது. சில நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதியளிக்கின்றன. இந்தியாவில் அத்தகைய அமைப்பு இல்லை. இதனால், நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தேர்தல் பத்திரங்கள் முறையைத் தேர்ந்தெடுத்தோம்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், அரசியல் கட்சிகள் நேரடியாக நிதி பெற வேண்டும் என்பதே… ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் நிதியளித்த நிறுவனங்களுக்கு பிரச்னைகள் ஏற்படும் என்பதால் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடவில்லை. நீங்கள் அடிப்படை யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவே இந்த தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வந்தோம்.

எனவே, தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வரும்போது எங்கள் எண்ணம் நல்லதாகவே இருந்தது. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் கண்டறிந்தால், அதை எங்களுக்குச் சுட்டிக்காட்டினால் அதைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்த குறைகளை அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து ஒருமனதாக இது குறித்துப் பேசலாம். விவாதிக்கலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.