தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் விறுவிறுப்பின்றியே காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கிறது. அதே நேரம் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உறுதி எனப் பேசப்பட்ட நிலையில், அது கைகூடாமல் போனது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அப்போது ,அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் தேமுதிகவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி.

அதில்,

தேனி – வி.டி. நாராயணசாமி

நாகை – சுர்ஜித் சங்கர்

தென் சென்னை – ஜெயவர்த்தன்

நாமக்கல் – தமிழ்மணி

சேலம் – விக்னேஷ்

சென்னை வடக்கு – ராயபுரம் மனோகரன்

கரூர் – தங்கவேல்

காஞ்சிபுரம் – ராஜசேகர்

அரக்கோணம் – ஏ.எல் விஜயன்

மதுரை – பி. சரவணன்

ஈரோடு – ஆற்றல் அசோக் குமார்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “பா.ம.க பா.ஜ.க கூட்டணியுடன் இணைந்தது எங்களுக்கு ஏமாற்றமாக இல்லை. அதிமுக எப்போது சொந்தக்காலில் நிற்கும் கட்சி. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வராவிட்டாலும் மகிழ்ச்சி. வருவதும் வராமலிருப்பது உங்கள் விருப்பம். அது அவர்களின் முடிவு.

கூட்டணியை நம்பி அதிமுக கிடையாது. அதேநேரம் கூட்டணி வேண்டாம் என்றும் கூறவில்லை. புதிய முக வேட்பாளர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். நாடாளுமன்றத்தில் மக்களுக்காக அழகிய முறையில் குரல் கொடுப்பார்கள். தலைமைக் கழகத்தின் மூலமும், மூத்த நிர்வாகிகள் மூலமும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக பலம்வாய்ந்த கட்சி. நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 3-வது பெரிய கட்சி. எங்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அதை நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பார்க்கமுடியும். கடந்த மூன்றாண்டுகாலமாக விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. எங்கள் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.