நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், இந்தியா கூட்டணித் தலைமையில் தி.மு.க தேர்தலை எதிர்கொள்கிறது. மேலும், தமிழ்நாட்டில், தி.மு.க தலைமையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்

இதில், தி.மு.க கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளிலும், தி.மு.க நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஒருசில நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில்,

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

வட சென்னை – கலாநிதி வீராசாமி

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர் பாலு

காஞ்சிபுரம் – செல்வம்

வேலூர் – கதிர் ஆனந்த்

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை – சி.என் அண்ணாதுரை

ஆரணி – தரணி வேந்தன்

கள்ளக்குறிச்சி – மலையரசன்

தருமபுரி – ஆர். மணி

கோவை – கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி – ஈஸ்வர சாமி

சேலம் – செல்பகணபதி

ஈரோடு – பிரகாஷ்

நீலகிரி – ஆ ராசா

தஞ்சாவூர் – ச.முரசொலி

பெரம்பலூர் – அருண் நேரு

தேனி – தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி – ராணி ஸ்ரீகுமார்

தூத்துக்குடி – கனிமொழி

இந்த பட்டியயலில் 50%க்கு மேல் புதியவர்கள் (11) என்றும் ⁠3 பெண்கள் என்றும் ⁠அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் 2 பேர் என்றும் ⁠முனைவர்கள் 2 பேர் என்றும் மருத்துவர்கள் 2 பேர் என்றும் ⁠வழக்கறிஞர்கள் – 6 பேர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.