நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். வேட்பாளர் தேர்வு குறித்தும், அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்தும் குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், “மொத்தம் 11 புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் மூன்று பெண்கள், இரண்டு ஒன்றியச் செயலாளர்கள், பிஹெச்.டி முடித்தவர்கள் இருவர், இரண்டு மருத்துவர்கள், ஆறு வழக்கறிஞர்கள் எனத் திட்டமிட்டே வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின். வேட்பாளர் தேர்வுக் குழு கொடுத்த லிஸ்ட்டை வைத்துக்கொண்டு, முழுக்க முழுக்க முதல்வர் மட்டுமே முடிவெடுத்திருக்கிறார்.

அண்ணா அறிவாலயம்

தருமபுரி – ஆ.மணி, பெரம்பலூர் – அருண் நேரு, கள்ளக்குறிச்சி – மலையரசன், தேனி – தங்க தமிழ்ச்செல்வன், சேலம் – செல்வ கணபதி, ஈரோடு – பிரகாஷ், பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி, தஞ்சாவூர் – முரசொலி, தென்காசி – ராணி ஸ்ரீ குமார், ஆரணி – தரணி வேந்தன், கோவை – கணபதி ராஜ்குமார் ஆகியோரைப் புதிதாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதில் இளைஞரணி சார்பில் ஈரோடு தொகுதியில் கே.இ.பிரகாஷ்-க்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அமைச்சர் நேருவின் மகன் அருண் ஆகிய இரண்டு வாரிசுகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது. அப்படிச் சொல்லப்போனால், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு இந்த முறை சீட் ஒதுக்கவில்லையே… அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்தானே” என்றார்.

வேட்பாளரை அறிமுகம் செய்யும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மேலும் தொடர்ந்தவர், “கோஷ்டிப்பூசல் இருக்கும் இடங்களிலும், அதிக அளவில் நெகட்டிவாக இருக்கும் இடங்களிலும் வேட்பாளர்களை மாற்றியிருக்கிறார். கடந்த முறை போட்டியிட்டதைவிடக் கூடுதலாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்க வேண்டும் என்பதாலேயே மூன்றாவதாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கியிருக்கிறார். அடிமட்டத் தொண்டருக்கு ஒதுக்க வேண்டும் என்பதால்தான் இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இது அதிகாரத்தைப் பரவலாக்கவும் அடிமட்டத் தொண்டர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவுமே செய்யப்பட்டது. செயல்பாடுகள் சரியில்லையென்றால் அவர்கள் பதவி நீடிக்காது என்பதைச் சுட்டிக்காட்டவும், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவுமே இதைச் செய்திருக்கிறார் முதல்வர்” என்றார் விரிவாக…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.