கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக-வின் கோட்டையாகவே இருந்துள்ளது. சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2019-ம் ஆண்டுதான் அங்கு திமுக வெற்றி பெற்றது.

பொள்ளாச்சி

சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரம் மீது படித்தவர், பண்பாளர் உள்ளிட்ட பாசிட்டிவ் இமேஜ்கள் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. மக்களை விட திமுகவினரே அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

பொள்ளாச்சி தொகுதி குறித்த உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் நெகட்டிவாக சென்றுள்ளது. அதனால் சண்முகசுந்தரம் மீண்டும் முயற்சி செய்தபோதும், அவருக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் பொள்ளாச்சி தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.

சக்கரபாணியுடன் ஈஸ்வரசாமி

ஈஸ்வரசாமி சக்கரபாணியின் தீவிர ஆதரவாளர். அந்த நெருக்கமே பொள்ளாச்சி தொகுதியில் அவருக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈஸ்வரசாமி திருப்பூர் மாவட்டம் மைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.  திமுக-வில் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். 2019-ம் ஆண்டு ஒன்றியக்குழு துணைத் தலைவராக இருந்துள்ளார்.  இவரின் மனைவி லதாப்ரியா மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வந்த நிலையில், ஈஸ்வரசாமி ஸ்வீட் பாக்ஸ்கள் செலவு செய்ய தயார் என முன்வந்துள்ளார். அதனுடன் சக்கரபாணியுடனான நெருக்கமும் கைக்கொடுக்க பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், சக்கரபாணியும் மல்லுக்கட்டி கொண்டிருந்தனர். இதனால் அந்தத் தொகுதி சிபிஎம்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை தனக்கு கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொள்ளாச்சி தொகுதியில் திமுகவை எப்படியாவது வெற்றிபெற வைத்து குட்புக்கில் இடம் பிடிக்க சக்கரபாணி நினைக்கிறாராம்.

அமைச்சர் சக்கரபாணி

இதன்மூலம் பெரியசாமியை கடந்தும் அரசியல் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் கணக்கு போடுகிறாராம். அதனால் தலைமையிடம் பரிந்துரை செய்து தன் ஆதரவாளர் ஈஸ்வரசாமியை களமிறக்கியுள்ளார். அந்த வகையில் பொள்ளாச்சி தொகுதி வெற்றி ஈஸ்வரசாமியை விட, சக்கரபாணிக்கு அவசியமானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.