தெலங்கானா மாநிலம் 2014-ல் தனியாகப் பிரிந்தபோது, வாகனங்களின் பதிவுக் குறியீடு TS என இருந்து வந்தது. TRS அரசாங்கத்தின் கீழ் ஆட்சி நடந்து வந்தபோது, இதற்கு TS என முன்குறியீடு இருந்து வந்தது. இதை Prefix என்று சொல்வார்கள். நம் ஊரில் தமிழ்நாட்டுக்கு TN என்பது Prefix. அதேபோல் TS என்று இருந்த பதிவுக் குறியீட்டை இனிமேல் TG என்று மாற்ற வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தலைமையில் இப்போது நடக்கும் காங்கிரஸ் அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. 

மாநில அரசு இதற்கான வேண்டுகோளை, மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி ஒப்புதலுக்காகக் காத்திருந்த நிலையில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்து கெஸட் நோட்டிஃபிகேஷன் வெளியிட்டு விட்டது. அதைத் தொடர்ந்துதான் தெலங்கானா மாநில அரசு இந்தப் புதிய விதியை அமுல்படுத்தி விட்டது. 

TG Number Plate

இன்று முதல் புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு இனிமேல் TG என்றுதான் நம்பர் ப்ளேட்கள் ரிஜிஸ்ட்டர் ஆகும். அதேபோல், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட TS நம்பர் ப்ளேட்கள் தெலங்கானா மாநிலத்தில் ஓடுவதற்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதேபோல் AP நம்பர் பிளேட்களுக்கும் எந்தச் சிக்கலும் இல்லை. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.