சமீபத்தில் இளையராஜா, இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவிற்கு நேரில் விசிட் அடித்து மகிழ்ந்திருக்கிறார். ராஜாவின் தீவிர ரசிகரான டி.எஸ்.பி. இதில் நெகிழ்ந்து மகிழ்ந்ததுடன் அதன் புகைப்படங்களையும் தன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்னொரு இசையமைப்பாளர் ஒருவரின் ஸ்டூடியோவிற்கு இளையராஜா நேரில் செல்வது அரிதிலும் அரிதான ஒன்று என்கிறது கோடம்பாக்கம்.

ஸ்டூடியோவில்..

இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத், இப்போது தமிழில் கவனம் செலுத்திவருகிறார் சூர்யா, விஷால் என பலரின் படங்களுக்கு இசைமைத்துவருகிறார். இந்நிலையில் தனது ஸ்டூடியோவிற்கு அவரின் மானசீக குருவான இளையராஜாவே நேரில் வந்திருந்ததைக் கண்டு, உருகிப்போயிருக்கிறார். ராஜா என்ன சொன்னார், அங்கே என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த விஷயங்கள் இவை.

பியானோவில்..

”கர்னாடக இசைக் கலைஞரான ‘மாண்டலின்’ ஶ்ரீனிவாஸின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதக் கடைசியில் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அந்த தினத்தில் சென்னை மியூசிக் அகடாமியில் கர்னாடக சங்கீத கச்சேரிகள் நடைபெறும். அதற்கான ஒத்திகைகள் தேவிஶ்ரீபிரசாத்தின் ஸ்டூடியோவில் தான் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருகிறது. சென்ற ஆண்டுகூட இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார். இவ்வாண்டு ஶ்ரீனிவாஸின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் என்பதால் அவருக்குப் பிடித்தமான இளையராஜாவின் பாடல்களை இசைக்க விரும்பினார்கள்.

அதில் இளையராஜா உருவாக்கின ராகங்களில் ஒன்றான ராஜலகரி ராகம், ‘மாண்டலின்’ ஶ்ரீனிவாஸுக்குப் பிடித்த ராகமாகும். ஆகையால் இந்த நினைவு தினத்தில் ராஜாவின் ராகங்களும், அவரது நத்திங் பட் விண்டில் இருந்து சில இசைத் துண்டுகளும் இசைக்க முடிவு செய்தனர். இதற்காக ராஜாவிடம் முறைப்படி அனுமதியும் வாங்கிவிட்டனர். இந்த நினைவு தினம் மியூசிக் அகாடமியில் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக நிகழ்ச்சிக்கான ஒத்திகை டி.எஸ்.பி-யின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஒத்திகையைக் காண விரும்பிய இளையராஜா, டி.எஸ்.பி-யிடம் ‘உன் ஸ்டூடியோவிற்கே வந்து பார்க்கிறேன்’ எனச் சொல்லிவிட்டார். ராஜாவின் இந்த வருகையை சற்றும் எதிர்பார்க்காமல், நெகிழ்ந்தே போயிட்டார் டி.எஸ்.பி. ராஜாவின் தீவிர பக்தர் அவர். இதைப் பலரும் அறிவார்கள். ஆனாலும் டி.எஸ்.பிதான் பலமுறை ராஜாவின் ஸ்டூடியோவிற்குச் சென்றிருக்கிறார். ஆனால் இவரது ஸ்டூடியோவிற்கு ராஜா செல்வது இதுதான் முதல் முறை.

மாண்டலின் ஶ்ரீனிவாஸ் புகைப்படத்தின் முன்.

ராஜாவின் தீவிர பக்தரான டி.எஸ்.பி-யின் ஸ்டூடியோவில் ஆளுயர இளையராஜாவின் புகைப்படம் ஒன்று ப்ரேம் செய்து மாட்டி வைத்திருப்பார்.. ராஜாவை வணங்கிவிட்டுத்தான் அருகே உள்ள சென்டிமென்ட்டான பியோனோ ஒன்றில்தான் அன்றைய இசைப்பணிகளை ஆரம்பிப்பார் டி.எஸ்.பி.

ராஜாவின் எதிர்பாராத விசிட்டால் உள்ளம் குளிர்ந்துவிட்டார் டி.எஸ்.பி. பக்தனின் வேண்டுகோளை ஏற்று தெய்வமே நேரில் வந்து தரிசனம் கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர் என்கிறார்கள். டி.எஸ்.பி-யின் ஸ்டூடியோவிற்கு வந்த ராஜா, அங்கிருக்கும் பியானோவில் இசைத்து மகிழ்ந்ததை தனது பாக்கியமாகவும் நினைத்து உருகுகிறார் டி.எஸ்.பி” என்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.