பிரபலங்கள் குறித்த வதந்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கும். இவற்றில் பல பொய்யாக இருந்தாலும், சில உண்மையாகவும் இருக்கும். அப்படி சில காலமாக சொல்லப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று, `நடிகை அதிதி மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் காதலிக்கிறார்கள்’ என்பது…

இயக்குநர் அஜய் பூபதியின் ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பில் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் சந்தித்தனர். அவ்வப்போது இருவரும் தங்களின் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டாலும், இருவரும் தங்கள் உறவை பற்றி பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். 

சித்தார்த்

சித்தார்த் தற்போது ‘டெஸ்ட்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான `சித்தா’ திரைப்படம் வெற்றியையும், பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

இந்தநிலையில் அதிதி ராவ் தனது இன்ஸ்டா பக்கத்தில், சித்தார்த்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை புத்தாண்டு அன்று பகிர்ந்துள்ளார். சித்தார்த்தும் இந்தப் புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2024 புத்தாண்டை இருவரும் ஒன்றாக வரவேற்கும் விதமாக, `மகிழ்ச்சியாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், நன்றியுள்ளவளாகவும் உணர்கிறேன்… உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துகள்’ என கேப்ஷனில் அதிதி குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.