இரான் நாட்டின் மறைந்த ராணுவ தளபதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு பாக்தாத் விமான நிலையத்தில், இரானின் உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானியை (Qassem Soleimani) ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலைசெய்தது. இந்த நிலையில், இரானின் தென்கிழக்கு நகரமான கெர்மனில் (Kerman), மறைந்த காசிம் சுலைமானியின் நினைவிடத்தை நோக்கி நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் சென்ற ஊர்வலத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்திருக்கிறது.

இரான்

குறிப்பாக, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்திருக்கிறது. இதுகுறித்து அதிகாரியொருவர், “கெர்மன் தியாகியின் கல்லறைக்குச் செல்லும் ஊர்வலத்தில், தீவிரவாதிகளால் தொலைதூரத்திலிருந்து இரண்டு வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன” என்று தெரிவித்தார். வெடிகுண்டு வெடித்த சமயத்தில், 73 பேர் கொல்லப்பட்டதாகவும், 170 பேர் காயமடைந்ததாகவும், இரானின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் பாபக் யெக்டபராஸ்ட் (Babak Yektaparast) தெரிவித்திருந்தார். பின்னர் அடுத்த சில மணிநேரத்தில், இந்த தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அரசு தொலைக்காட்சி கூறியது. இந்த நிலையில், தற்போது மொத்தமாக 103 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து கெர்மன் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (Kerman Red Crescent Society) தலைவர் ரேசா ஃபல்லாஹ் (Reza Fallah), “அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதும், ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. அதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அந்த இடத்திலிருந்து தொடர்ந்து வெளியேற்றி வருகிறோம். கூட்டம் அதிகமாக இருப்பதால், பணிகள் சற்று கடினமாக இருக்கிறது. இதனால், அந்தப் பக்கம் செல்வதற்கான அனைத்து பாதைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன” என்று அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

அவரைத் தொடர்ந்து, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), “இந்தக் கோழைத்தனமான செயலை செய்த குற்றவாளிகள், தங்களின் கொடூரமான செயலுக்காக விரைவில் அடையாளம் காணப்பட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி விரைவில் தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

அதேசமயம், இரான் அதிபரின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது ஜம்ஷிடி (Mohammad Jamshidi), இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என்றும், இதில் தீவிரவாதம் ஒரு கருவிதான் என்றும் கூறியிருக்கிறார். அதோடு, ரஷ்ய அதிபர் புதின் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.