மும்பையில் மாநில அரசுக்கு சொந்தமான `மகானந்த் டைரி’ என்ற பால் பண்ணை நிறுவனம் மிகவும் பழைமையானது. தமிழகத்தில் ஆவின் பால், கர்நாடகாவில் நந்தினி பால் போன்று மும்பையில் மகானந்த் பால் பிரபலம். ஆனால் தனியார் நிறுவனங்களில் போட்டி காரணமாக, அந்நிறுவனம் இப்போது நஷ்டத்தில் ஓடுகிறது. தொழிலாளர்களுக்கு 130 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. 1200 தொழிலாளர்கள் மகானந்த் பால் பண்ணையில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க அதனை குஜராத்தை சேர்ந்த தேசிய டைரி டெவலப்மெண்ட் போர்டு என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்க மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேசிய டைரி டெவலப்மெண்ட் போர்டு மத்திய அரசுக்கு சொந்தமானது ஆகும். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் இது தொடர்பாக கூறுகையில், ”மகானந்த் பால் பண்ணையை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

நானா பட்டோலே

தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய ரூ.130 கோடியை மாநில அரசு கொடுப்பதா அல்லது மத்திய அரசு நிறுவனம் கொடுப்பதா என்ற பிரச்னையால் தான் மகானந்த் நிறுவனம் மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைப்பதில் சிக்கல் இருந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அரசின் முயற்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள செய்தியில், “மகானந்த் நிறுவனத்தை குஜராத் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு கர்நாடகாவில் நந்தினி பால் எனும் பிராண்டை கொன்றது போல் மகானந்த் பெயரையும் அழிக்கப்பார்க்கிறது. தினமும் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்திற்கு ஒரு தொழில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

சஞ்சய் ராவத்

மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே இது குறித்து கூறுகையில், ”முதலில் வேதாந்தாவின் ஃபாக்ஸ்கான், அடுத்து வைர மார்க்கெட் இப்போது மகானந்த்தை குஜராத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க அனைத்து தொழில்களையும் குஜராத்துக்கு கொடுத்து பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மகாராஷ்டிராவின் பொருளாதாரமும் மோசமாக இருக்கிறது”என்று குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.