“ஐபிஎல் தொடரில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் படைப்பார்!” – ஏலத்துக்கு முன் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி

Micheal Starc

மதுஷங்காவுக்கு  4.60 கோடி

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்காவை 4.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருக்கிறது.

உனத்கட்டுக்கு 1.60 கோடி

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை 1.60 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது.

jaydev unadkat

வரலாறு படைத்த ஸ்டார்க்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பௌலரான மிட்செல் ஸ்டார்க்கை கடும் போட்டிக்குப் பிறகு ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஸ்டார்க்கை ஏலம் எடுக்க குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து கொல்கத்தா எடுத்துள்ளது.

Mitchell Starc

ஷிவம் மவிக்கு அடித்த ஜாக்பாட்!

ஷிவம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்திய பௌலரான இவர் இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார்.

கவனம் ஈர்த்த உமேஷ்!

உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது.

umesh yadav

அல்சாரி ஜோசப்க்கு 11.50 கோடி

அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது பெங்களூர் அணி.

“இந்த விலையிலேயே டிராவிஸ் ஹெட்டை எடுத்துவிடுவோம் என நாங்கள் நினைக்கவே இல்லை.” – முத்தையா முரளிதரன்

சிஎஸ்கேவில் டேரில் மிட்செல்!

உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியிருக்கிறது.

சிஎஸ்கேவில் டேரில் மிட்செல்!

ஹர்ஷல் படேலுக்கு கடும் போட்டி!

ஹர்ஷல் படேலை 11.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியிருக்கிறது.

ஹர்ஷல் படேலை வாங்க குஜராத், பஞ்சாப், லக்னோ அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.

Harshal patel

வரலாறு படைத்த பேட் கம்மின்ஸ்!

பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை படைத்தார் கம்மின்ஸ்.

இதற்கு முன் சாம் கரனை பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு வாங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது.

Pat Cummins

சிஎஸ்கேவில் ஷர்துல்!

முன்பு சென்னை அணிக்கு ஆடிய ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி.

Shardul Thakur

சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா!

சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் கலக்கிய நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி 1.8 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

Rachin Ravindra

அடிப்படை விலைக்கே விற்கப்பட்ட ஹசரங்கா!

இலங்கை அணியின் ஸ்பின்னரான வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கே வாங்கியது சன்ரைசர்ஸ்!

WaninduHasaranga

கருண் நாயர், ஸ்மித் Unsold!

கருண் நாயரையும் ஸ்மித்தையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

50 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்டிருந்த மனீஷ் பாண்டேவும் Unsold.

ட்ராவிஸ் ஹெட்டிற்கு கடும் போட்டி!

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. சென்னை அணி ஹெட்டிற்காக கடுமையாக போராடியது.

ஹாரி ப்ரூக்கிற்கு 4 கோடி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது.

முதல் வீரராக ஏலம் போன ரோவ்மன் பவல்!

கரீபிய வீரரான ரோவ்மன் பவலை 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது.

தொடங்கியது ஐ.பி.எல் 2024 மினி ஏலம்!

IPL 2024 Auction

77 இடங்களை நிரப்புவதற்கான இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஐ.பி.எல் 2024 தொடருக்கான இந்த நிகழ்வு துபாயில் சற்று முன் தொடங்கியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.