2024- ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 17-ஆவது ஐ. பி. எல். தொடருக்கான மினி ஏலம் இன்று துபாயில் நடக்கவிருக்கிறது. 

கடந்த முறையைப் போலவே இம்முறையும் 10 அணிகள் மோதவுள்ள நிலையில், எந்தெந்த அணிகள் எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இம்முறை ஏலத்தைப் புதிதாக ஒருவர் நடத்தப்போகிறார் என்றும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள மே மாதத்திற்கான மினி ஏலம் இன்று துபாயிலுள்ள கோகோ- கோலா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.  ஐ. பி. எல். தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை ஒரு பெண் நடத்தவிருக்கிறார். இம்மாதிரியான ஏலத்தின் பொழுது Auctioneer அதாவது ஏலதாரரின் பங்கு மிகவும் முக்கியமானது. 2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐ. பி. எல். தொடரின் ஏலத்தை நடத்தி வந்தார். அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவர் ஏலத்தை நடத்தி வந்தார்.

இம்முறை ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் (வயது  48) நடத்தவுள்ளார் என்று அறிவித்திருக்கின்றனர். இவர் 25 ஆண்டுகளாக ஏலதாரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிகமாக கலைப்பொருள்களை ஏலம் விடும் நிகழ்வுகளில் ஏலதாரராக பணியாற்றியிருக்கிறார். அதில் கொண்டிருக்கும் நீண்ட அனுபவத்தை வைத்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலதாரராக மாறினார்.

குறிப்பாக ப்ரோ கபடி லீக், மகளிர் ஐ. பி. எல். தொடர் போன்ற போட்டிகளில் ஏலதாரராக பணியாற்றியுள்ளார். ப்ரோ கபடி லீகின் 8 வது சீசனுக்கு முன்பு நடந்த இவர் நடத்தியிருந்தார். அதன்மூலம், ப்ரோ கபடி ஏலத்தை நடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். ப்ரோ கபடி ஏலத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் பெண்களுக்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தையும் சிறப்பாக நடத்தி முடித்தார். இப்போது  ஆண்களுக்கான ஐ. பி. எல். தொடருக்கான ஏலத்தை நடத்தும் முதல் பெண்ணும் இவரே. கல்லூரி படிப்பை முடித்த பிறகு ‘க்ரிஸ்டி’ எனப்படும் முதன்மையான ஏல நிறுவனத்தில் பணியைப் பெற்ற இந்தியாவை சேர்ந்த முதல் பெண் ஏலதாரர் ஆனார்.

‘ஐ.பி.எல் ஏலத்தை நடத்த ஆவலாகக் காத்திருக்கிறேன். ஒரு ஆண் ஏலதாராக நீங்கள் ரொம்பவே சுவாரஸ்யமாக ஏலத்தை நடத்தி முடிக்கலாம். அதேமாதிரி ஒரு பெண் ஏலதாரராக சுமாராக அயர்ச்சியளிக்கும் வகையிலும் ஏலத்தை நடத்தி முடிக்கலாம். இது அப்படியே தலைகீழாகவும் நடக்கலாம். இதற்கும் பாலினத்திற்கும் சம்பந்தம் இல்லை.’ என்கிறார் மல்லிகா சாகர்.இம்முறை நடக்கவிருக்கும் மினி ஏலத்தில் 333 வீரர்களின் பெயர் உறுதியாகியுள்ள நிலையில் 77 வீரர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள். எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கும் என்று அதிக எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரம் காத்துக்கொண்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.