இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜப்பான்’. இப்படம் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படம்.

இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்தின் இசை வெளியீடும் சென்னையில் நடக்கவிருக்கிறது.

கார்த்தி

படத்தில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், கே.எஸ்.ரவிக்குமார், சுனில், விஜய்மில்டன் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு வருகிற 28-ம் தேதி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கிறது.

‘ஜப்பான்’ கார்த்தியின் 25-வது படம் என்பதால் இந்த இசை வெளியீட்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் கார்த்தியின் வளர்ச்சிக்கு வித்திட்ட வெற்றிப்பட இயக்குநர்கள் பலரும் பங்கேற்று, கார்த்தியை வாழ்த்துகின்றனர். சிறப்பு விருந்தினராக மணிரத்னம், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ் எனப் பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் நலத்திட்ட உதவிகளும் செய்யவிருக்கிறார் கார்த்தி.

‘ஜப்பான்’ படத்தில்

விழா மேடையில் சூர்யாவும் லோகேஷும் இருப்பதால், ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் குறித்த அப்டேட்கள் வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. அதில் அவரது ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். கார்த்தியின் 26வது படமாக வளர்ந்துவரும் இப்படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என டைட்டில் வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு தீபாவளி அன்று அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.