இப்போதைக்கு ஹேட்ச்பேக்குகளைவிட, செடான்களைவிட எஸ்யூவிகள்தான் மேல்தான் மக்களுக்கு செம கிரேஸ்! இது போன மாதமும் நிரூபணம் ஆகியிருக்கிறது. செப்டம்பரில் முக்கியமான ஒரு 5 எஸ்யூவிகள் விற்பனையில் சக்கைப் போடு போட்டிருக்கின்றன. அது என்னனு பார்க்கலாம்!

1. டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான்

முதல் இடத்தில் டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி இருக்கிறது. லேட்டஸ்ட்டாக ஃபேஸ்லிஃப்ட் ஆகியிருக்கும் நெக்ஸானைப் பார்த்தால், ஏதோ ஃப்யூச்சரிஸ்ட்டிக் மாடலில், சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வருவதுபோலவே இருக்கிறது. இந்த டிசைனுக்காகவே புது நெக்ஸான் கார் செப்டம்பரில் செம புக்கிங் ஆகியிருக்கிறதாம். கூடவே 5 ஸ்டார் ரேட்டிங் பில்டு குவாலிட்டி வேறு. சொல்லவா வேண்டும்! நெக்ஸானில் மொத்தம் 68 வேரியன்ட்கள் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இன்னொரு விஷயம் – பெட்ரோல்/டீசல்/எலெக்ட்ரிக் என்று எல்லா ஏரியாக்களிலும் ஓடும் கார் நெக்ஸான் மட்டும்தான். சுமார் 10 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரைக்கும் நெக்ஸானை வாங்கலாம். இதுதான் இந்த மாதத்தின் டாப் செல்லிங் எஸ்யூவி. செப்டம்பர் மாதம் 15,325 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதுவே போன ஆண்டு இதே மாதம் 14,518 கார்கள் விற்பனையாகின. 

2. மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா

இது 2–ம் இடத்தில் இருக்கிறது. ‘பாதுகாப்பெல்லாம் விடுங்க பாஸ்; நம்பகத்தன்மையும் மைலேஜும் இருந்தா போதும்’ என்பவர்கள் நேராகப் போய் நிற்கும் இடம் மாருதி ஷோரூம்தான். பிரெஸ்ஸா இப்போது டிசைனில் நல்ல மெருகேறி இருக்கிறது. இதன் சிஎன்ஜி மாடலின் மைலேஜ் சுமார் 24 கிமீ வருகிறது. இந்த பிரெஸ்ஸா போன செப்டம்பர் மாதம் 15,001 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. Lxi, Vxi, Zxi, Zxi+ எனும் 4 வேரியன்ட்களிலும், சிங்கிள் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது பிரெஸ்ஸா. 

3. டாடா பஞ்ச்

டாடா பஞ்ச்

மூன்றாவது இடத்தையும் டாடா பிடித்துக் கொண்டுவிட்டது. டாடா மோட்டார்ஸின் மைக்ரோ எஸ்யூவியான பஞ்ச், டாடாவுக்குக் கைகொடுக்கும் எஸ்யூவி. இது செப்டம்பர் மாதம் 13,045 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது போன ஆண்டு செப்டம்பரைவிட 6% அதிகம். 2022 செப்டம்பரில் இது 12,251 கார்கள் விற்பனையாகின. இதன் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், ஸ்மூத்னெஸ்ஸுக்குப் பெயர் பெற்றது. இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை இப்போது பெண்களும் டிக் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பஞ்ச்சின் 5 ஸ்டார் பில்டு குவாலிட்டியும், இதன் இரட்டை சிலிண்டர் கொண்ட CNG வேரியன்ட்டும் செம! சிஎன்ஜி கார்களிலேயே நல்ல பூட் ஸ்பேஸ் கொண்டிருப்பது பஞ்ச்தான். என்ன, கார்தான் குட்டி! ஆனால் படு சுட்டி! 

4. ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா

இந்த மிட் சைஸ் எஸ்யூவி க்ரெட்டாவை வாங்குவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. சும்மாவா பின்னே… பார்ப்பதற்கே ப்ரீமியம்னெஸ் தெறிக்கும் க்ரெட்டாவில். இது இந்த செப்டம்பர் மாதம் 12,717 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மற்ற சின்ன எஸ்யூவிகளைவிட சுமார் 1000–ங்களில்தான் குறைகிறது விற்பனையில். அதனால், 4–வது இடத்தில் இருக்கிறது க்ரெட்டா. ரியர் டிஸ்க், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்ஸ் என ஏகப்பட்ட சொகுசு வசதிகளோடு – பாதுகாப்பை மேம்படுத்தும் ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பமும் க்ரெட்டாவை கிண்ணென்ற கார் ஆக்குகிறது. எனக்குத் தெரிந்து சில டாக்டர்களின் பரிந்துரையாகவும் க்ரெட்டா ஜொலிக்கிறது. அந்த ஸ்டார் ரேட்டிங்கிலும் கவனம் வைத்தால்… இன்னும் எகிறலாமே ஹூண்டாய்!

5. ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ

5–வது இடத்தைப்  பிடிப்பதும் ஹூண்டாய்தான். முன்னது மிட்சைஸ் எஸ்யூவி என்றால், இது சப் காம்பேக்ட் எஸ்யூவி. இது போன 2022 செப்டம்பர் மாதம் 11,033 கார்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு இதன் விற்பனை 11% எகிறியிருக்கிறது. க்ரெட்டாவில் உள்ள ADAS போன்ற பெரிய தொழில்நுட்பம் போன்ற ஒரே சின்ன கார் வென்யூதான். அட கூடவே 6 காற்றுப்பைகளையும் ஹூண்டாய் ஸ்டாண்டர்டு ஆக்கியது, வென்யூவைத் தூக்கி நிறுத்திவிட்டது.

போனஸாக ஒரு விஷயம் – இதில் 6–வது இடத்தைப் பிடித்திருப்பது, நம் ஊர் மஹிந்திரா. ஸ்கார்ப்பியோ N மற்றும் ஸ்கார்ப்பியோ க்ளாஸிக் கார்கள் இரண்டும் சேர்ந்து 11,846 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.