காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லை, வறட்சியால் அணைகளில் நீர்வரத்து 53% குறைந்துவிட்டது, ஆகவே தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு, கர்நாடகாவிடம் தண்ணீரே இல்லை” எனப் பழைய புராணத்தை மீண்டும் வாசித்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து தமிழ்நாட்டுக்குத் தேவையான உரிய நீரை மீண்டுமொருமுறை தர மறுத்திருக்கிறது கர்நாடகா அரசு.

நாம் தமிழர்

இவ்வேளையில் `காவிரி நதிநீர் நம் உரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து  நாம் தமிழர் கட்சி சார்பில் அக்டோபர் 8-ம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் எதிரில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டிருந்த, ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு நாமும் சென்றிருந்தோம். அதிருப்தி, குற்றச்சாட்டு, கண்டனம், எச்சரிக்கை என ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே…

கண்டன் உரையாற்றும் சீமான்

`காவிரி நதி நீரைத் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்கிறோம்! வாய்மூடி மெளனம் காக்கும் ஒன்றிய மோடி அரசையும் தி.மு.க அரசையும் கண்டிக்கின்றோம்!” என்ற கோஷத்துடன் தொடங்கிய ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க,

கட்சியின் செய்தி தொடர்பாளர் சே.பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில் குமார் உள்பட மாணவர், இளைஞர், சுற்றுச்சூழல் மற்றும் மகளிர் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.

இடும்பாவனம் கார்த்திக்

இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பேசும்போது, “பெங்களூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகியவை கர்நாடக காவிரி டெல்டா மாவட்டங்களாக இருக்கின்றன. காவிரி சிக்கல் வரும்போதெல்லாம் ஒட்டுமொத்த மாநிலப் பிரச்னையாகப் பார்க்கப்பட்டு, அரசியல் தொடங்கி எல்லா துறையினர் ஒருமித்த குரலாக `தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது’ என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மாவட்ட சிக்கலாகவே சுருக்கப்படுகிறது” என அதிருப்தியைப் பதிவு செய்த அவர்,

“கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தலின்போது கைகோர்த்து நின்ற ஸ்டாலினும் திருமாவளவனும், தண்ணீர் தர மறுக்கும்போது பேச்சுவார்த்தை நடத்தி, அழுத்தம் கொடுத்து, காவிரி நீரைத் தர நெருக்கடி கொடுத்தால், அவர்கள் சரியான தலைவர். அவர்களும் போராடாமல் எங்களையும் போராட விடாமல் ஒடுக்குகிறார்கள்” என்றார் கொதிப்புடன்.

செந்தமிழன் சீமான்

`நா.த.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் “சீனாவில் உருவாகிற சிந்து நதி, லடாக் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து பாகிஸ்தானுக்கும் பாய்ந்து பாகிஸ்தானின் நீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்தியா நினைத்தால் நதியைத் தடுத்துவிட முடியும். பகை நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு நீர் தருகிற இந்தியாவால் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வாங்கி தர முடியவில்லை என்றால் இது எப்படிப்பட்ட இந்தியா?” என மத்திய அரசைக் கண்டித்த அவர், `நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் வென்றால் நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம் என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பக்கத்து மாநில காங்கிரஸ் அரசுடன் பேசி தண்ணீரையே வாங்கிதர முடியாத இவர்களால் மத்திய காங்கிரஸ் அரசுடன் பேசி நீட் தேர்வை ரத்து செய்ய வைக்கப் போகிறார்களா..?” என்றார் கிண்டலாக.

சீமான்

2016-ல் காவிரி போராட்டத்தில் உயிர்நீத்த நாம் தமிழர் கட்சியின் விக்னேஷை நினைவு கூர்ந்து, இறுதியாக மைக் பிடித்த சீமான் “ராஜஸ்தானில் பேசும் பிரதமர் மோடி காவிரி நீருக்காக I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் சண்டையிட்டுக் கொள்கிறது எனக் கேலி பேசுகிறார். பேச்சுவார்த்தை நடத்தி நீரை பெற்றுதர வேண்டிய இடத்தில் இருப்பவர் எவ்வளவு பொறுப்பற்று பேசுகிறார்கள்“என மத்திய பா.ஜ.க அரசைச் சாடினார் சீமான். தொடர்ந்து பேசியவர் “தீய்ந்துபோன திராவிட மாடல் அரசு எதிர்க்கட்சியாக இருந்தால்  மட்டும்தான் காவிரி நீருக்காக போராடும்” என்றார்.

சீமான்

மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா..? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி கொடுக்க வேண்டுமல்லவா?” என விமர்சித்தவர் கர்நாடகா அரசையும் விட்டுவைக்கவில்லை, “ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமுடியாது எனச் சொல்லும் கர்நாடகா அரசு, ஒரு யூனிட் மின்சாரம்கூட வேண்டாமெனச் சொன்னால் ரோஷமும் மானமும் உள்ளவர்கள் எனக் கருதலாம்” என்றார்

சீமான்

தொடர்ந்து “காவிரி விவகாரம் 2024 தேர்தலில் பாதிக்குமா எனக் கேட்கிறார்கள், பாதிக்குமா இல்லை… நான் பாதிக்க வைப்பேன். தேர்தலில் ஒரு இடத்தில்கூட இந்த காங்கிரஸ், பா.ஜ.கவை வெல்ல விடாமல் தடுக்க முடியும். காங்கிரஸைத் தூக்கிக் கொண்டு தி.மு.க வருகிறதென்றால் அவர்களையும் சேர்த்துத் தோற்கடிக்க வேண்டும்” என்றார் ஆக்ரோஷத்துடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.