பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் கேட்டரிகரியெல்லாம் இல்ல. எ ஃப்ரெண்ட் இஸ் எ ஃப்ரெண்ட் – இதுதான் இன்னைக்கு டீன் லைஃப்ஸ்டைல். ஆனா, எங்க வீட்டுல பாய் ஃப்ரெண்டுங்கிறது பயங்கரமான கெட்ட வார்த்தை. அதுதான் என் பிரச்னை!

Friends

ஆர்தடாக்ஸ் ஃபேமிலினு சொல்லி, சின்ன வயசுல இருந்தே என்னையும் என் தங்கச்சியையும் ஆண்களிடம் இருந்து தனிமைப்படுத்தி, பொத்தி பொத்தி வளர்த்தாங்க. கூடப் பிறந்த அண்ணன், தம்பியும் இல்ல. ஆண் உறவினர்கள்கிட்டயும் அளவாதான் பேசணும். என்னையும், தங்கையையும் இதே காரணத்துக்காகவே கேர்ள்ஸ் ஸ்கூல்தான் சேர்த்தாங்க. சுருக்கமா சொன்னா, அப்பாவைப் தவிர வேற எந்த ஆண்கிட்டயும் சகஜமா பேசினதில்ல நான் ஸ்கூல் முடிக்கிற வரைக்கும்.

இன்ஜினீயரிங் கோர்ஸ் என்பதால, கோ எட் காலேஜ்ல தவிர்க்க முடியாம என்னைச் சேர்த்துவிட்டாங்க. ஆனா நான் வளர்ந்த சூழலால, ஆரம்பத்துல சக மாணவர்கள்கிட்ட பேச ரொம்ப சங்கோஜப்பட்டு, தயங்கி, ஒளிஞ்சு, ஓடினு இருந்தேன். கூடப் படிக்கிற தோழிகள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா அந்தச் சூழலுக்கு சகஜமாக்கினாங்க. செகண்ட் இயர்ல இருந்து, பசங்ககிட்ட தயக்கம் இல்லாம பேச, பழகன்னு என் சுபாவத்தை சரிபடுத்திக்கிட்டேன்.

Best Friend Forever

வீட்டுல, ‘என் ஃப்ரெண்ட் விகேஷ் இருக்கான்லம்மானு…’னு ஒரு ஆண் பெயரைச் சொல்லி என்னால சகஜமா ஒரு விஷயத்தைப் பேச முடியாது. என்னைக் குற்றவாளியாக்கி, ‘பசங்ககிட்ட பேசாதன்னு சொன்னா, பட்டாதான் நீ தெளிவியானு..?’ அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இதனாலேயே, என் நேர்மையான நட்பைக்கூட நான் வீட்டில் மறைக்க வேண்டிய நிலைமை.

இப்போ தேர்ட் இயர் படிக்கிறேன். எட்டு பேர் எங்க கேங்ல. அதுல மூணு பேர் பசங்க. ஆனா அவங்க பெயரை பொண்ணுங்க பேர்லயே மொபைலில் சேவ் பண்ணியிருக்கேன். இதில் ஆரம்பிச்சு, பசங்களோட பர்த் டே பார்ட்டிக்கு ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து போறது, பசங்க, பொண்ணுங்கனு நாங்க சேர்ந்து சின்ன சின்ன அவுட்டிங் போறது, என்னோட க்ரூப் புராஜெக்டில் ரெண்டு பசங்களும் இருக்கிறதுனு… இதையெல்லாம் ஒவ்வொண்ணா நான் வீட்டில் மறைச்சிட்டே வர்றேன்.

ஒரு கட்டத்துல, ‘நாம என்ன தப்புப் பண்றோம்? ஏன் இதையெல்லாம் மறைக்கணும்? ஒரு ஹெல்தி ஃப்ரெண்ட்ஷிப்பை அக்சப்ட் பண்றதுல நம்ம பேரன்ட்ஸ் ஏன் இவ்வளவு பிற்போக்குத்தனத்தோட, பிடிவாதத்தோட இருக்கணும்? இவங்களோட மைண்ட் செட் தப்புனு எப்படி இவங்களுக்குப் புரிய வைக்கிறது? நாளைக்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது, அங்கயும் நாலு ஆண்களோட வேலை பார்த்துத்தானே ஆகணும்? அப்போவும், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ சொல்லித்தான் வீட்டில் வேலைக்கு அனுப்புவாங்களா? இதுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?’னு மனசுல கேள்விகள் முளைச்சிட்டே இருக்கு.

College friends(Representational image)

ஃப்ரெண்ட்ஷிப்ங்கிற பேர்ல லவ் டிராக் ஓட்டுற பொண்ணுங்களை தயவு செஞ்சு இந்த கேட்டரிக்கு கொண்டு வந்து அறிவுரை பண்ண வேண்டாம். நான் பேசுறது, நேர்மையான ஃப்ரெண்ட்ஷிப் பத்தி. என்னோட நிலமையில் இருக்கிற தோழிகள்தான் நீங்களும்னா, நிச்சயம் நாம நம்ம பேரன்ட்ஸ்கிட்ட இதைப் பத்தி வெளிப்படையா பேசியே ஆகணும். எங்க பேரன்ட்ஸ் மாதிரிதான் நீங்களும்னா, தயவு செஞ்சு எங்களைப் புரிஞ்சுக்கோங்க.

A friend is a friend. இதை என் அப்பா, அம்மாவுக்குப் புரியவைக்க என்னதான் வழி?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.