பிரேசிலின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் நெய்மர்.

கால்பந்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் நெய்மருக்குத் தற்போது பெண் குழ்நதை பிறந்திருக்கிறது. இதனைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெய்மர் – ப்ரூனா பியன்கார்டி தம்பதியினர் தெரிவித்திருக்கின்றனர். அக்குழந்தைக்கு மாவி என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

அவர்கள் வெளியிட்டிருந்த பதிவில், “எங்கள் வாழ்க்கை முழுமைப் பெற எங்கள் மகள் மாவி இவ்வுலகிற்கு வந்திருக்கிறாள். நாங்கள் அவளை வரவேற்கிறோம். நீங்கள் எங்களால் ஏற்கெனவே நேசிக்கப்பட்டவர். எங்களை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி” என்று மகள் குறித்து பதிவிட்டிருக்கின்றனர். நெய்மர் – ப்ரூனா பியன்கார்டி தம்பதியினருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உலகெங்கும் அதிக ரசிகர்களைக் கொண்ட நெய்மர் PSG (Paris Saint-Germain) அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடினார். தற்போது அந்த கிளப்பில் இருந்து விலகி அல் ஹிலால் கால்பந்து கிளப்பில் இணைந்திருக்கிறார். 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று அந்த கிளப்பும் தெரிவித்திருந்தது.

நெய்மர்

சமீபத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று நடைபெற்றது. அதில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்திருந்தார் நெய்மர். மொத்தம் 78 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.