ஆதித்யா எல் 1 விண்கலம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.

இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்கிறது. பிரபஞ்சத்தை புரிந்துக்கொள்ள விஞ்ஞானிகள் எடுத்து வரும் முயற்சி ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கானது என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

Aditya-L1 Mission

“விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சரியாக செயல்படத் தொடங்கியுள்ளன” – ஆதித்யா திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் தமிழக விஞ்ஞானி நிகர் ஷாஜி!

நிகர் ஷாஜி

தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி.  ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றி இருக்கும் இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். அதிக  மதிப்பெண்களைப் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்து அப்போதே சானை படைத்திருக்கிறார். 

பின்னர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்த நிகர் ஷாஜி, பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்து பின்னர் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார். தற்போது ஆதித்யா எல்-1 திட்ட  பணிக்கு இயக்குநராக பணியாற்றி  மீண்டும் தமிழர்களைப் பெருமை அடையச் செய்திருக்கிறார்.   

Aditya-L1 Mission -ன் 1,440 புகைப்படங்கள்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ஸ்பெஷல் கருவி, Visible Emission Line Coronagraph. இது சூரியனை தினமும் 1,440 புகைப்படங்கள் எடுக்கும். 2024 பிப்ரவரி மாதத்திலிருந்து இது இயங்க ஆரம்பிக்கும்.

என்ன செய்யப் போகிறது Aditya-L1 Mission

ஏழு ஆய்வுக்கருவிகள் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ளன. இவற்றில் மூன்று கருவிகள், லாக்ராஞ்ச் 1 புள்ளியைச் சுற்றிய பகுதிகளை ஆய்வு செய்யும். நான்கு கருவிகள், சூரியனைத் தொலைவில் இருந்தபடி ஆய்வு செய்யும். இந்த ஏழு கருவிகளில் ஆறு கருவிகள் அணைத்து வைக்கப்பட்டிருக்கும். 2024 ஜனவரி 6-ம் தேதி லாக்ராஞ்ச் 1 புள்ளியைத் தொட்டதும் இவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மீண்டுமொரு சாதனை

இந்தியாவின் மிக வெற்றிகரமான ராக்கெட் என்று வர்ணிக்கப்படும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமே இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வழக்கமாக விண்ணுக்குக் கிளம்பிய 25 நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து விண்கலமோ, செயற்கைக்கோளோ பிரிந்து சென்றுவிடும். அதன்பின் ராக்கெட்டின் பணி தேவைப்படாது. ஆனால், ஆதித்யா எல்-1 விண்கலம் அப்படி இல்லை. ராக்கெட் விண்ணுக்குச் சென்றபின் 63 நிமிடங்கள் கழித்தே அது பிரிந்து செல்கிறது.

Aditya-L1 Mission: விண்ணில் பாய்ந்த பெருமை!

Aditya-L1 Mission |ஆதித்யா எல்-1

Aditya-L1 Mission: விண்ணில் பாய்ந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.