ஆவணி வளர்பிறை துவிதியை சுப முகூர்த்த நாளில் 17-9-2023 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சக்திவிகடனும் வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஆயுஷ் ஹோமம் நடத்த உள்ளது.

ஆயுஷ் ஹோமம்

ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள், 60 வயது, 70 வயது, 80 வயது நிறைவு அடைந்தவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கின்றன ஞான நூல்கள். உங்களுக்கோ உங்களின் பிரியமானவர்களுக்கோ இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யலாம்.

ஆயுள் என்றால் ஒருவரின் வாழும் காலத்தைக் குறிக்கும். இந்த காலத்தை நீட்டிக்கும் சக்தி ஆயுஷ் தேவதைக்கு உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயுஷ் தேவதையை வணங்கி ஆயுஷ் ஹோமம் செய்து கொண்டால், இழந்த ஓராண்டு காலத்தை, வலிமையை மீண்டும் பெறலாம் என்றும் சொல்கின்றன. பெயர் சூட்டுதல், காது குத்துதல், திருமணம் போன்று ஆயுஷ் ஹோமம் செய்வதும் ஆன்மிகக் கடமைகளில் ஒன்று என்றும் பெரியோர்கள் கூறுவர்.

ஆயுஷ் தேவதை

இந்த ஆயுஷ் ஹோமம் உங்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மன வேதனையிலிருந்து நிவாரணம் ஆகியவற்றை அளிக்கும். ஆயுள் மற்றும் ஆற்றல் காரகனாகிய ஆயுஷ் தேவதை உங்கள் வாழ்வில் லௌகீக மற்றும் ஆன்மீகக் காரியங்களை திறமையுடன் கையாளும் ஆற்றலை வழங்கும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதால் நிச்சயம் உங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதும் உண்மை.

ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள், 60 வயது, 70 வயது, 80 வயது நிறைவு அடைந்தவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கின்றன ஞான நூல்கள். உங்களுக்கோ உங்களின் பிரியமானவர்களுக்கோ இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யலாம். மரணமில்லாப் பெரு வாழ்வை வாழ்ந்து வரும் சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமா, மகாபலி சக்கரவர்த்தி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாச்சார்யர், பரசுராமர் ஆகியோர் ஆசியால் உங்கள் வாழ்வும் கீர்த்தியும் நீடிக்கும் என்பதும் உண்மை.

ஆயுஷ் ஹோமம்

இந்த ஆயுளை வளர்க்கும் அற்புத ஹோமத்தை சிறப்பானதொரு தலத்தில் உங்களுக்காக ஏற்பாடு செய்ய எண்ணினோம். அப்போது தாமாக முன்வந்து இந்த ஹோமத்தை நடத்தித்தர சம்மதித்தார்கள் வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய நிர்வாகிகள். அஷ்ட நாகங்களான வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன் ஆகியவை இங்கு வந்து நாகேஸ்வரனை வழிபட்டு நாகலோகத்தில் சிரஞ்சீவியாக வாழும் பேறைப் பெற்றன என்கிறது தலவரலாறு. அதன் காரணமாகவே சுவாமி நாகேஸ்வரன் என்றும் அவர் மேனியெங்கும் நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பதும் சான்றாக இன்றும் அமைந்துள்ளது.

‘நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் என்பது எங்களுக்குப் பொருந்தாது! ஒருவர் பாற்கடலில் பரந்தாமனைத் தாங்குகிறார். ஒருவர் நீலகண்டரின் கழுத்தில் ஆபரணமாகப் புரள்கிறார். ஒருவர் தேவலோக ரகசியங்களைக் காக்கிறார். ஒருவர் அம்பிகையின் குடையாகத் திகழ்கிறார். இருவர் நவநிதிகளில் இரண்டை அருள்பவராக இருக்கிறார். ஒருவர் சுபகாரியங்களின் அதிபதியாக இருக்கிறார். கடைசி ஒருவரோ இந்த பூமியைத் தாங்குபவராக இருக்கிறார். இதில் யாருக்கும் ஆயுள் கணக்கு, ஆண்டுகளில் இருக்கக் கூடாது. ஏன் யுகக் கணக்கில் கூட இல்லாமல், என்றும் வாழும் சிரஞ்சீவித் தன்மையைப் பெற வேண்டும்! அதுவே ஈசனிடம் நாம் வைக்கும் கோரிக்கையாக இருக்க வேண்டும். மரணமில்லாத தன்மையை அந்த மகேசனைத் தவிர யாரும் தரமுடியாது. எனவே அவரை சரண் புகுவோம்!’ என்று வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன் ஆகிய அஷ்ட நாகங்களும் ஈசனைப் பணிந்தன.

ஸ்ரீநாகேஸ்வரர்

நாகங்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்த ஈசன், பாரதத்தின் தெற்கே ஒய்மா நாட்டின் வேணுவனமாக இருந்த பகுதியில் அவற்றை தவம் இருக்கப் பணித்தார். அதன்படி அவையும் சுயம்புவாக அங்கு தோன்றிய சிவலிங்கத் திருமேனியைத் தொட்டுத் தழுவி சிவபூஜையைத் தொடர்ந்தன. காலம் கனிய, ஈசனும் அங்கு தோன்றி அவற்றுக்கு யுகங்கள் யாவும் நிலைத்து வாழும் சிரஞ்சீவித் தன்மையை அருளினார் என்று தலபுராணம் கூறுகிறது, சிரஞ்சீவித் தன்மையை நாகங்களுக்கு அளித்ததால் இது ஆயுள் பலமளிக்கும் தலமாக உள்ளது.

எப்படிச் செல்வது: திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் மார்க்கத் தில் சுமார் 14 கி.மீ. தொலைவில் வெள்ளிமேடுப்பேட்டை அமைந்துள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஆலயத்தின் திருப்பணிகளின் அவசியம் குறித்த கட்டுரை 27.8.19 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் வெளியானது. தொடர்ந்து, வழக்கம்போல் நம் வாசகர்கள் பலரும் பெரும் பங்களிப்பை வழங்கிட, இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு வரும் 10-9-2023 அன்று மகாகும்பாபிஷேகம் காணவுள்ளது. திரளான பக்தர்கள் அன்று கூடி ஈசனையும் அம்பிகையையும் ஆராதிக்க உள்ளனர். தொடர்ந்து வரும் நாள்களில் மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளன. மண்டல பூஜைகள் நடைபெறும் நாளிலேயே இந்த ஆயுஷ் ஹோமம் நடைபெறுவது சிறப்பிலும் சிறப்பானது. பன்மடங்கு பலனை வழங்கவல்லது.

வெள்ளிமேடுப்பேட்டை ஆலயம்

ஆவணி வளர்பிறை துவிதியை சுப முகூர்த்த நாளில் 17-9-2023 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சக்தி விகடனும் வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஆயுஷ் ஹோமம் நடத்த உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீங்காத நீங்காத ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம். யமனையும் விரட்டும் இந்த வழிபட்டால் நிச்சயம் உங்கள் ஆயுள் கூடும். மேலும் செல்வவளம் பெற, மங்கல வாழ்வு நிலைக்க இந்த ஹோமம் அவசியமானது என்கிறார்கள் பக்தர்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம், மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.