நீங்கள் தினசரி வாசிக்கும் பழக்கம் கொண்ட தீவிரமான வாசகர் என்றாலும் சரி, வாசிக்க இப்போதெல்லாம் நேரம் கிடைக்கவில்லை என்று கூறுபவரானாலும் சரி, உங்கள் அலமாரியில் அன்போடு காத்துக்கிடக்கும் புத்தகத்தை ஆரத் தழுவும் நேரமிது! புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல! அதுவொரு கலை. வாழ்வியல். சில கிராம் பைத்தியக்காரத்தனமும் கூட.

புதிதாக ஒரு புத்தகத்தைப் பிரித்து, அதன் வாசத்தை நுகர்வது முத்தத்தை விட சிறந்த உணர்வென்று புத்தக பிரியர்களுக்கு தெரியும், புரியும். இப்படி வாசிப்பே சுவாசிப்பாக இருப்போர் எல்லாம் வெறும் படிப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் சிறந்த காதலர்களாக, சாகச விரும்பிகளாக, ஏதோவொரு தேடல் கொண்டவர்களாக, காலப் பயணிகளாக, வாழ்க்கையை கழுகுப் பார்வையோடு அணுகுபவர்களாக நம்மோடு சகஜமாக வாழ்ந்து வருகின்றனர்.

நூலக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, அணுவின் முடிந்த ஆழம் பார்க்கவும், பிரபஞ்சத்தின் முடியாத எல்லை பார்க்கவும் முயல்பவர்கள் இவர்கள். புத்தக அலமாரி தான் இவர்களின் வீக்னஸ். புத்தகங்களே இவர்களின் மேட்னஸ்.

BookLoversDay2023

வாசித்தல் என்பது ஏதோவொரு தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல, கிட்டத்தட்ட வாசிப்பாளர்கள் எல்லாம் ஒரு சீக்ரெட் சொசைட்டி போல உலகம் முழுக்க இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகக் கடைகளிலும், புத்தகக் கண்காட்சிகளிலும் பேசாமல் பேசிக்கொள்கின்றனர். பஸ்ஸிலும் டிரெயினிலும் புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால், சந்தோஷப்படுகிறார்கள். என்ன புத்தகம் வாசிக்கப்படுகிறது என்பதனைக் கவனிக்கிறார்கள்.

பிடித்த எழுத்தாளரின் புத்தகங்கள் பற்றி முன் பின் தெரியாதவர்களோடும் மணிக் கணக்காக பேச தயங்குவதில்லை இவர்கள்! தங்களுக்குப் பிடித்த புத்தக கதாபாத்திரங்களோடு பயணிப்பது இவர்களின் அன்றாட வேலையும் கூட… இவர்களுக்கு புத்தகங்கள் என்பது ஏதோவொரு பொருள் அல்ல. அது தங்களின் உணர்வையும் அறிவையும் தொடர்ந்து இயங்கச் செய்யும் ரீசார்ஜ் பாயிண்ட்.

வாசிப்பதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அகத்திலும் புறத்திலும் பல மேஜிக் செய்கிறது புத்தக வாசிப்பு. தொடர்ந்து படிப்பதால் மன அழுத்த அளவு 68% குறைவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. புத்தக வாசிப்பாளர்களில் இறப்பு விகிதம் 20% குறைவாக இருக்கிறது என்கிறது மற்றொரு ஆய்வு. வாழ்நாளையும் வாழ்க்கைத் தரத்தையும் அதிகரிப்பதில் புத்தகங்களின் பங்கை அளவிட முடியாது!

இந்தப் புத்தக காதலர்கள் தினத்தில் உங்களுக்காக ஒரு சோஷியல் மீடியா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் மனம் கவர்ந்த புத்தகம் எது? மிகப் பிடித்த புத்தக கதாபாத்திரம் எது? இப்படி வாசிப்பு சார்ந்த ஏதோவொரு சுவாரஸ்யமான விஷயத்தை சோஷியல் மீடியா போஸ்ட்டாகவும் ரீல்ஸ் ஆகவும் பதிவேற்றுங்கள். books.vikatan.com-ல் 25%தள்ளுபடியும், வேள்பாரி நாவலும் வெல்லும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள்! போட்டி குறித்த முழு விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க… https://bit.ly/47nomdV #படிச்சாச்சா?

உங்களின் விவரங்களையும், போஸ்ட்/ரீல்ஸ் லிங்குகளை https://bit.ly/47nomdV என்ற இணைய பக்கத்தில் மறக்காமல் பதிவிடவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.