திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் திருப்புகழைப் பாட வாழ்க்கையே மணக்கும் என்பதும் உண்மை. எல்லா தெய்வங்களின் திருநாமங்களோடும் இயல்பா இணையற அழகு, முருகப்பெருமானின் திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு. கணபதியோடு சேர்ந்து கணபதி சுப்ரமணியம், ஸ்ரீராமரோடு சேர்ந்து ராமசுப்ரமணியன், ஈசனோடு சேர்ந்து சிவசுப்ரமணியன், சக்தியோடு சேர்ந்து சக்திவேலன், பெருமாளோடு சேர்ந்து வேங்கடசுப்ரமணியன், ஐயப்ப சுவாமியோடு சேர்ந்து ஹரிஹரசுப்ரமணியன், ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியோடு சேர்ந்து அனுமந்த குமார், என்று முருகப்பெருமான் எல்லாக் கடவுளோடயும் இணைஞ்சிருக்கார்.

திருப்புகழும் இவ்வாறே. வேற எந்த புனித நூலுக்கும் இல்லாத ஒரு தனிப்பெருமை திருப்புகழுக்கு உண்டு. அதாவது, முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ் என்றாலும் அதில் மற்ற தெய்வங்கள் பற்றியும் புகழ்ந்து பாடியிருக்கார் அருணகிரிநாதர். சைவ, வைணவ, சாக்த பேதங்களெல்லாம் பார்க்காம, பாடியிருப்பது திருப்புகழுக்கு மட்டுமே உரித்தான தனிப்பெருமை. அப்படிப்பட்ட பாடல்களை தொகுத்து பாடுவதே திருப்புகழ் மகாமந்திர வழிபாடு எனப்படுகிறது.

திருப்புகழ் மகாமந்திர பூஜை

திருப்புகழ் மகா மந்திர பூஜைல விநாயகர், சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, ஐயப்ப ஸ்வாமி, அனுமன் ஆகியோரின் படங்களையும், நடுநாயகமா முருகப்பெருமானோட படத்தையும் வைச்சு பூஜை பண்றோம். இப்படி ஏககாலத்தில் ஏழு தெய்வங்களை ஏகாந்தமா பூஜை செய்யும்போது கிடைக்கக்கூடிய பலன் பன்மடங்கு அதிகம்’ என்கிறார் திருப்புகழ் திலகம் மதிவண்ணன் ஐயா.

ராமாயணம், மகாபாரதம், கம்பராமாயணம், அபிராமி அந்தாதி, 12 திருமுறைகள், நீதிநூல்கள், சங்கத்தமிழ் எனப் பல விஷயங்களை மடைதிறந்த வெள்ளம் போல சொற்பொழிவாற்றக்கூடியவர் திரு.மதிவண்ணன். இவரே மிகவும் சக்தி வாய்ந்த திருப்புகழ் மகாமந்திர பூஜையை விமரிசையாக நடத்தி வைக்க இருக்கிறார்.

மேலும் கணபதிக்கு அருகம்புல், ஈசனுக்கு வில்வம், அம்பிகைக்கு செண்பகம், கந்தனுக்கு செந்தாமரை, திருமாலுக்கு பவழமல்லிகை, ஐயப்ப சுவாமிக்கு கதம்பம், ஆஞ்சநேயருக்கு துளசின்னு 7 வகைப் பூக்களும், அதேபோல, கணபதிக்கு சுண்டல், ஈசனுக்கு சீரகசம்பா சாதம், அம்பாளுக்குப் பாயசம், முருகனுக்கு தினைமாவு, மகாவிஷ்ணுவுக்கு புளியோதரை, ஐயப்ப ஸ்வாமிக்கு நெய் அப்பம், அனுமனுக்கு மிளகுவடைன்னு 7 வகை நைவேத்தியங்கள் செய்து பூஜை பண்றது ரொம்பவும் விசேஷம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அருள்மிகு மேகநாதேஸ்வரர்

சகல தெய்வங்களும் சங்கமிக்கும் இந்த வழிபாட்டில் நிச்சயம் உங்கள் குறைகள் நீங்கி வளங்கள் பெருகும் என்பது உறுதி என்கிறார்கள் ஆன்றோர்கள். எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கும் இந்த திருப்புகழ் மகாமந்திர பூஜை தமிழ்ப் புத்தாண்டான 14-4-2023 அன்று சக்தி விகடனும் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் கோயில் நிர்வாகமும் இணைந்து நடத்த இருக்கிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை சென்னை வண்டலூர் மேல்கோட்டையூரில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் அவர்கள் இந்த பூஜையை நடத்தவுள்ளார். அனைவரும் சங்கல்பம் செய்து பயன்பெற வேண்டுகிறோம்.

கடன் தொல்லை, அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுவோர், வரன் கிடைக்காமல் வருந்துவோர், வீடு, சொத்து விஷயங்களில் அவதிப்படுவோர், வம்பு-வழக்குகளில் தவிப்பவர்கள்… இப்படி பலவிதமான பிரச்னைகளில் இருப்பவர்கள் ஒரே ஒருமுறை இந்தப் பூஜையில் சங்கல்பித்துப் பிரார்த்தனை செய்தால் போதும், அதன் பலனாக சகல பிரச்னைகளும் விரைவில் தீரும்; அன்பர்கள் நினைப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

வருணனும் இலங்கை வேந்தன் ராவணனின் திருமகன் மேகநாதனும் வழிபட்ட மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் இந்த மகாபூஜையை நடத்துவது இன்னும் சிறப்பு. ஆயுள் விருத்தியை அளிக்கும் இந்த ஆலயத்தில் திருப்புகழ் மகாமந்திர பூஜையை நடத்துவது கூடுதல் பலன் அளிக்கும். உடல் மற்றும் மனப்பிணிகள் யாவும் தீர இந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். விரயங்கள் தீரவும், வேதனைகள் அகலவும் நிச்சயம் கந்தன் துணையிருப்பான். கல்வியில் தேர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு, வெளிநாட்டு யோகங்கள் யாவும் கிட்ட இந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

திருப்புகழ் மகாமந்திர பூஜை

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதிப் பிரசாதம்  அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பூஜை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, பூஜை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, பூஜை-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.