டிக் டாக்

குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக டிக்டாக் செயலிக்கு 16 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

லெபனான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

அமெரிக்காவில், இந்தியர் ஒருவருக்கு 33 மாதம் சிறைத்த்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக 29 வயது ஆஷிஷ் பஜாஜ் என்பவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கனடாவில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பனிப்புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இருளில் தவித்து வருகின்றனர். இது வரை பனிப்புயலுக்கு இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் ஆர்துர் கிராண்ட் டெக்னோலஜிஸ் (Arthur Grand Technologies) என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில், `வெள்ளையர்கள் மட்டும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’ என்ற வாசகம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவ்மென் (Suella Braverman) என்ற பெண், இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ரூபி, வருகின்றன ஜூன் மாதம் ஏலத்துக்கு வருகிறது. 30 மில்லியன் டாலர் இதன் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஏலத்தில் விற்கப்படும் பட்சத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ரூபி என்ற சாதனையை இந்தக் கல் படைக்கும்.

ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில், 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா-வின் குழந்தைகள் நல ஆணையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில், ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தன்னுடன் பிளாட்டிபஸ் (Platypus) எடுத்துச்சென்றதால் அவர் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. விலங்குகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல் என்பதால், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது

12 வயது திருநங்கை தடகள வீராங்கனைக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அவர் மகளிர் தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.