பொதுவாகவே, பண விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் கில்லாடிகள். வேலைக்குப் போகாத காலத்திலேயே பெண்கள்தான் சேமிப்பில் கில்லி. வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஆண்களிடம் மாதக் கடைசியில் பர்ஸ் காலியாகிவிடும். அந்த நேரத்தில் குடும்பத்திற்கான செலவுகளை செய்பவர்கள் பெண்கள். அவர்கள் எப்படி, எங்கு சேமித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நெருக்கடி காலத்தில் குடும்பத்தின் பணத் தேவைகளைச் சமாளிப்பதில் வல்லவர்கள்.

இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராகப் பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். பெண்கள் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் ஆண்களைவிட அதிகமாகப் பெண்களால் சம்பாதிக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட்

இன்று நாம் என்னதான் பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என்று பேசினாலும் பணியிடங்களில் சம்பள விஷயத்தில் பாரபட்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆண்களை விட பெண்கள் பண மேலாண்மையில் ஸ்மார்ட்டாக இருப்பார்கள் என்பதால் அவர்கள் பணத்தை எளிதில் பல மடங்காகப் பெருக்கிவிடுவார்கள்.

முன்பெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இன்று பெண்கள் மியூச்சுவல் ஃபண்டிலும், பங்குச் சந்தையிலும் தைரியமாக முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் 50% பெண்கள் தங்கத்தில்தான் பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்பது மகளிர் தினத்துக்காக நாணயம் விகடன் மேற்கொண்ட சர்வே முடிவுகளில் தெரிந்தது.

மியூச்சுவல் ஃபண்ட்

மேலும், ஃபேஷன், உடைகள், மேக்கப் போன்றவற்றுக்கு மட்டுமே பெண்கள் அதிகம் செலவு செய்பவர்களாக மாறிவிட்டார்கள் என்கிற கருத்து இங்கு பலருக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. பெண்கள் எப்போதுமே திட்டமிடுவதிலும், பட்ஜெட் போட்டு செலவு செய்வதிலும், பொறுப்புடன் பணத்தைக் கையாள்வதிலும் கெட்டிக்காரர்கள்.

அதே சமயம், பரவலாகப் பெண்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் பங்குச் சந்தை பற்றியும் தெரிந்துகொண்டு அதில் முதலீடு செய்வதில் தயக்கம் இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும், பங்குச் சந்தை பற்றியும் தெளிவாகப் புரிந்துகொண்டால் பெண்கள் முதலீட்டில் ஆண்களை மிஞ்சிவிடுவார்கள். பெண்கள் பணத்தைப் பல மடங்காகப் பெருக்கும் உத்திகளையும் கற்றுக்கொள்ள நாணயம் விகடன் அருமையான வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னையில் வரும் மார்ச் 12-ம் தேதி பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சியாக மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. `உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் குடும்ப நிதித் திட்டமிடல்’ என்ற இந்த நிகழ்ச்சியை வரும் மார்ச் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் சிறப்புரை ஆற்றுகிறார். மிரே அஸெட் நிறுவனத்தின் ரீடெய்ல் விற்பனை பிரிவின் பிராந்திய தலைவர் சுரேஷ் பாலாஜியும் கலந்துகொண்டு முதலீட்டாளர்களுக்கு உள்ள சந்தேகங்கள், குழப்பங்களுக்கு பதில் அளிக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மார்ச் 8-ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்வது அவசியத்திலும் அவசியம். உங்களுடைய வருகையை உறுதி செய்ய https://bit.ly/3d2WG6G என்ற லிங்கில் பதிவு செய்யவும்.

மியூச்சுவல் ஃபண்ட்

பெண்களின் நிர்வாகம், சேமிப்பு, முதலீடு தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் குழப்பங்களையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம். பெண்கள் தங்கள் கணவருடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பலனை அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.