தமிழகத்தில் பிணந்தின்னி கழுகுகளை அழிவிலிருந்து பாதுகாக்க, கால்நடைகளுக்குப் போடப்படும் வலி நிவாரணமருந்துகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களிடம் இது பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கழுகு இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கழுகுஆராய்ச்சியாளர் மணிகண்டன், இது தொடர்பாகக் கூறுகையில், “ நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்குபிணந்தின்னி கழுகுகளின் வாழ்விடங்களாக உள்ளது.

கழுகு

கழுகுகள், காடுகளின் துப்புரவுப் பணியாளர்களாகவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பெரும் நோய்கள்பரவாமல் தடுக்கும் ஒரு நோய்தடுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதிகளுக்கு அருகில்வாழும் கால்நடைகள் மிருகங்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் போது, விலங்கு சாப்பிட்ட இறைச்சி போகமீதமுள்ள இறைச்சியைக் கழுகுகள் உண்ணுகின்றன. அப்படி உண்ணும் போது கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக அளிக்கப்படும் டைக்கோபிளக்ஸ் மருந்துகளால் கழுகுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு அவை அழிந்துவருவதாக முன்னரே ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் குறிப்பிட்ட மருந்தை விற்பனைசெய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடையால் அதன் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால் தற்போது அதற்கு மாற்றாக கீடோ பொக்கேன், அபிட்டோ பிளக், நிமியூ சிடைத் போன்ற வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவது சரியானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

கழுகு

நீலகிரி மாவட்டத்தைக் கழுகு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து எஞ்சியுள்ள கழுகு இனங்களை பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். கழுகு இனங்களுக்கு போதிய உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வனத்துறை மூலம் கழுகு தொடர்பான ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து அதனுடன் முதுமலை பழங்குடிமக்களை இணைத்து கழுகு பாதுகாப்பு பணிகளைச் செயல்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.