காபூல் ராணுவ விமான நிலையத்துக்கு வெளிப்புறத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

தைவான் அதிபர் சாய் இங்-வென் ( Tsai Ing-wen) கொரோனாவை எதிர்கொள்ளச் சீனாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரத் தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் உதவியுடன் நேபாளத்தில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை அந்த நாட்டுப் பிரதமர் புஷ்பா கமல் தஹல் (Pushpa Kamal Dahal) திறந்து வைத்தார்.

உகாண்டாவில் புத்தாண்டு அன்று மாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

கனடா

கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்த இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக கனடா அரசு தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தானில் புத்தாண்டு அன்று நடந்த கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் காயமடைந்தனர்.

வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் 400 கி.மீ தொலைதூரம் வரை சென்றடைந்ததாகத் தென் கொரியா அறிவித்திருக்கிறது.

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நெகட்டிவ் கோவிட் பரிசோதனை சான்றிதழ்களைக் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியா.

ஸ்பெயினில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் பொம்மைகளை மைதானத்தில் வீசினர். இது வருடாவருடம் புத்தாண்டன்று நிகழும் பாரம்பரிய வழக்கமாகும்.

பிரேசில் அதிபர் லுலா

பிரேசில் அதிபராக 3-வது முறையாக நேற்று பதவியேற்றார் லூலா டா சில்வா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.